ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதல்: 48 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 48 பேர் உயிரிழந்துள்ளதுடன், 67 பேர் காயமடைந்துள்ளனர்.

பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு இடம்பெறவிருந்த கல்வி நிலையம் ஒன்றிலேயே இன்று(புதன்கிழமை) மாலை இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்கொலை குண்டுதாரி ஒருவரை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்திய போது, தற்கொலைதாரி குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

18 வயதிற்கும் குறைவானவர்களே இதன்போது அதிகளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்