விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ வழக்கு!

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தொடுக்கப்பட்ட வழக்கில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால் நீதவான்கள் இந்த வழக்கை வேறு நீதவான்கள் அடங்கிய அமர்விற்கு மாற்றுவதாக தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குறித்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக வைகோ வழக்கு தொடர அவருக்கு உரிமையில்லை என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு நீதவான்கள் ஆர்.சுப்பையா மற்றும் ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதவான்கள், இவ்வழக்கை வேறு நீதவான்கள் கொண்ட அமர்விற்கு மாற்றுவதாக தெரிவித்து, விசாரணையை இம்மாதம் 28 ஆம் திகதியன்று நடைபெறும் என்று ஒத்திவைத்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்