23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த பொதுமக்களின் காணி விடுவிப்பு!

23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஆறு குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி இன்று (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள் அச்சுவேலி இராணுவ முகாமிற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்..

இந்த நிலையில், ஏற்கனவே ஒன்றரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சியிருந்த 2 ஏக்கர் காணியும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்