14 வயது சிறுமியின் தற்கொலைக்கு காரணம் என்ன தெரியுமா?

நேற்றைய தினம் நடந்த 14 வயது சிறுமியின் தற்கொலைக்கான காரணம் அனைத்து தமிழர்களின் மனசாட்சிகளையும் உறுத்தும் அளவுக்கு உள்ளது.

முருகண்டியை சோகத்தில் ஆழ்த்திய 14 வயது சிறுமியின் 31.08.2018 நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கு சிறுமி வறுமையே காரணம் என தெரியவந்துள்ளது.

சிவபாதகலையகம் பொன்னகர் பாடசாலையில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த சிறுமி தனது தாயாரிடம் பாடசாலை செல்வதற்கு வெள்ளை சீருடை புதிதாக தைத்து தருமாறு கேட்டுள்ளார் தாய் இரண்டு மூன்று நாட்கள் பொறுத்துக் கொள்ளுமாறும் அம்மா தைத்து தருகின்றேன் என்று கூறியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த சிறுமி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

சிறுமியின் தாயார் கூலி வேலைக்கு சென்று தான் தன்னுடைய குடும்ப செலவீனங்களை மேற்கொண்டு வருகின்றார். வீட்டில் மிகுந்த வறுமை

நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் தாயார் தான் தினக்கூலிக்கு சென்று வருகின்றார்.

600ஃஸ்ரீ ரூபாய் சம்பளத்தில் குடும்ப வாழ்வை கொண்டு செல்வதால மிகுந்த கஸ்ட்டத்தில்; வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

சிவபாதகலையக பாடசாலையில் சிறுமிக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கூறுகையில் சிறுமி கல்வி கற்பதில் வலு கெட்டிக்காரி எதிர்காலத்தில் ஒரு டாக்டர்ராகும் கனவு அவளுக்குள் இருந்ததாக கூறுகின்றனர்.

வறுமை ஒரு சிறுமியின் உயிரை பறித்துவிட்டது என்ற செய்தி உலகத்தமிழர்களின் மனசாட்சியை உறுத்த கூடியதாக உள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
கூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவைகளை செய்யும் வாய்ப்பு ஒருபோதும் எனக்கு ஏற்படாது. ஆகையால் கூட்டமைப்புடன் இணைவதற்கு விருப்பம் இல்லையென பிரதியமைச்சர்
“ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்“ என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிற்கும்,
யேர்மனியில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு வழமைபோல வருகின்ற மாவீரர் நாள் தினத்தன்று டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள மாவீரர் நாள் நிகழ்வு

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*