மரியாதையற்ற முதுகெலும்பு இல்லாத Old Cunning Foxy சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைமையை இராஜிநாமா செய்ய வேண்டும்

பிரபாகரனின் வீரம், மானம், தேசியத்தில் உறுதி, பாசம் எல்லாவற்றுக்கும் தலைகீழான ஒருவரே சம்பந்தன். இவர் தமிழர்களின் அவமானச்சின்னம்

1960இல் சத்தியாக்கிரகம் நடக்கும் போது பலர் போலீசாரால் சிறை வைக்கப்படடார்கள். சம்பந்தனை போலீஸ் பிடித்த போது, தான் தமிழரசு கட்சி இல்லை என்று சொல்லி தப்பிய நரி.

எதிர்க்கட்சித் தலைமையைப் பாதுகாப்பதற்காக இந்த சம்பந்தன் மற்றும் சுமந்திரன் கடுமையாகவும் வலுவாகவும் பாராளுமன்றத்தில் மஹிந்தாவுக்கெதிராக வலு கோபமாக விவாதித்தனர், அதே சமயம் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி விவாதிக்க விருப்பமில்லை அல்லது போருக்குப் பின்னர் தமிழர்கள் இழந்ததை மீட்டெடுக்ககூட பாராளுமன்றத்தில் விவாதிக்க விருப்பமில்லை.

தமிழர்களுக்கு எதிர்க்கட்சித் தலைமையின் பயன் என்ன?
அமெரிக்கா ராஜாங்க செயலாளர் திரு. கெரி 2015 கொழும்புக்கு வந்த போது, கெரியை ஸ்ரீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கூறினார் – ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றுவதன் மூலம் தனது எதிர்க்கட்சித் தலைமையை காப்பாற்ற முயற்சித்தது இந்த கொடூரமான நரி வேலை.

அன்று, கெரியுடன் அரசியல் தீர்வைப் பற்றி பேசுவதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச முயன்றார். ஆனால் அரசியல் தீர்வு பற்றி பேச விரும்பாத திரு.சம்பந்தன் திரு. கெரி முன் சுரேஷ் பிரேமச்சந்திரன் பேசுவதை நிறுத்துமாறு கேட்டார்.

முதலமைச்சர் கெரியுடன் உரையாற்றுவதற்கான அனுமதியை சம்பந்தன் கொடுக்கவில்லை. இதனால் முதலமைச்சர், தான் கொண்டு வந்த குறிப்புகளை கெரியுடன் கொடுத்து சென்றார்.

தேர்தல் காலங்களில் சம்பந்தனின் நோக்கம் என்ன?
பாராளுமன்றத் தேர்தலின் போது திரு. சம்பந்தன் , பல தமிழ் எம்.பி.க்களை (20 எம் பி) தேர்ந்தெடுத்து கொடுக்க தமிழர்களைக் கேட்டுக் கொண்டார். இது தமிழர்களுக்கு பேரம் பேசுவதற்காக தனது கையை பலமாக்கும் என்றார் .

ஆனால், அவர் பேரம் பேசவில்லை. வட-கிழக்கு இணைப்பையும் சமஷ்ட்டியையும் பேரம் பேசவில்லை ஆனால் இரண்டையும் விட்டு கொடுத்தார். எதிர்க்கட்சித் தலைமையை பெறுவதற்கு தமிழ் மக்களிடமிருந்து அதிக எம்.பி.க்களை அவர் கேட்டார் என்பது தெரிந்ததே. இவரின் சிந்தனை ஜே வி பி யை விட அதிக ஆசனங்கள் எடுத்தால் தான் எதிர் கட்சி தலைமையக வரலாம். – எதிர்க்கட்சித் தலைமையை எடுப்பதற்றக்கான நரியின் சூழ்ச்சி .

மேலும், தேர்தல் காலத்தில் சுமத்திரனையும் தனக்கு உதவிக்கு தேவை என்கிறார். இப்போ புரிவது என்ன என்றால் சுமந்திரனை எதிர்க்கட்சித் தலைமையை பெறுவதற்கு தரகராக பாவித்துள்ளார்.

சம்பந்தன் மற்றும் அவரது வால் சுமந்திரன் மைத்திரி சிறிசேனவுடன் எந்தவொரு உடன்படிக்கையும் கேட்கவில்லை, ஆனால் எதிர்க்கட்சித் தலைமை மட்டுமே கேட்டுக்கொண்டார்கள் .

இந்த எதிர்க்கட்சித் தலைமை ஸ்ரீலங்காவின் போர்க்குற்ற குற்றம், சர்வதேச விசாரணை, சர்வதேச நீதி, வடகிழக்கு இணைப்பு, கூட்டாச்சி என்பவற்றை அடைவு வைத்தது.

சம்பந்தனின் மரணத்திற்கு பின்னரும், தமிழர்கள் அவரை திட்டுவார்கள் . எதிர்க்கட்சித் தலைமையை எடுப்பதற்கு, இவரது கையாளுதல் எல்லாம் தமிழரை ஏமாற்றுவதற்கான வழி , இதனை தமிழர்கள் மறக்க மாடடார்கள். 145,000 மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்ட பின்னரும், ஸ்ரீ லங்காவின் போர்க்குற்ற குற்றம், சர்வதேச விசாரணை, சர்வதேச நீதி, சர்வதேசத்தினால் வடகிழக்கு இணைப்பு, கூட்டாச்சி என்பவற்றை எல்லாம் விட்டு தனது சுயநலத்திக்காக வாழ்ந்த ஒரு நரி என்று தான் தமிழர்கள் கூறுவார்கள். ஒரு போதும் இவருக்கு சிலை எழுப்பப்பட மாட்டாது. இதனை தமிழர்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். எப்படி கருணாநிதி யின் மரணத்தின் பின் தமிழர்கள் அமைதியாக இருந்தார்களோ அப்படி தான் சம்பந்தனின் மரணத்திற்கு பின்னும் அமைதியாக இருப்பார்கள்.

தனக்கு சிங்களம் கொடுத்த பதவிக்கு தமிழரின் துரும்பை (சர்வசேத விசாரணை, சர்வதேசம் விரும்பும் வடகிழக்கு இணைந்த சமஷ்டி) விற்ற ஒரு நரி .

சம்பந்தன் வடகிழக்கு இணைப்பு மற்றும் கூட்டாட்சியை ஒருபோதும் கேட்டதில்லை. அவர் கேட்டால், அவரை எதிர்க்கட்சித் தலைமையிலிருந்து வெளியேற்றும்படி சிங்களவர்கள் அரசாங்கத்திடம் கேட்பார்கள்- இது சிங்களத்துக்கு பயந்த நரி

இந்த சம்பந்தனுக்கு துயரங்களுக்கு உள்ளாகும் தமிழர் பற்றி எந்த அனுதாபமும் இல்லை:
1. காணமால் போன பெற்றோர்கள்
2. மக்கள் இடைநிலை முகாமில் வாழ்கின்றனர்
3. இலங்கை இராணுவத்தால் தொடர்ச்சியாக பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் தமிழர்கள் .
4. சிங்கள மக்களால் தமிழர்களின் காணி கைப்பற்றப்பட்டதால், தமிழர்கள் இடைநிலை முகாம்களில் உள்ளார்கள்
5. சிங்கள இராணுவம் தமிழ் தாயகத்திற்கு கடத்துவதன் மூலம் போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்வதன் மூலம் தமிழ் இளைஞர்களை அழிக்கின்றது.
6. சிங்களவர்களால் கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்கள், மற்றும் அத்துமீறிய மீன்பிடி ஆகியவற்றின் மூலம் தமிழரை வறுமையாக்கின்றது.
7. சிங்கள இராணுவம் தமிழர்களின் தனிப்பட்ட மற்றும் பொது வைபவகங்களில், குறிப்பாக குழந்தை பிறந்த நாள் நிகழ்வுகள் உட்பட, வகுப்பு கொண்டாட்டம் மற்றும் பருவமடைதல் கொண்டாட்டம் ஆகியவற்றில் பங்கேற்பு.
8. சிங்கள பௌத்த அடையாளங்களை நிறுத்துவதை தடுத்து நிறுத்த சம்பந்தனின் பங்களிப்பு இல்லை.

இந்த சம்பந்தனை கொடூரமான கிழட்டு குள்ளநரி (Cunning Old Fox ) என்று பெயரிடலாம். அவர் அவரைப் பற்றி தான் கரிசனை, தமிழரை பற்றி ஒரு கவலையும் இல்லை . அவருடைய புத்தகத்தில் ஜனநாயகம் இல்லை. விடுதலைக்காக போராடும் மக்கள் இரக்கமற்ற பயங்கரவாதிகள் என்று உலகம் முழுவதும் கூறுவார். தியாகமே தெரியாத இந்த நரியை தலைமையாக்கியது தமிழருக்கு ஒரு கேடு அல்லது பாவம்.

சம்பந்தனே, சிங்களத்திடம் பிச்சை எடுத்தது போதும், தமிழ் எம் பி என்று கூறி தமிழரை விற்றது போதும். தயவு செய்து நீரும் உமது வால் சுமந்திரனும் எதிர் கட்சி தலைமையை விட்டும், தமிழ் அரசியலை விட்டும் போனால் நரகத்தில் கொஞ்ச இருவருக்கும் ஆறுதல் கிடைக்கும்.

ஆனால் உண்மையில் இந்த பழைய நரி சம்பந்தன் தான் தீவிரவாதி. வாக்குகளை பெற மக்களுக்கு பொய் சொன்னார். பின்னர் பணம் சம்பாதிக்க மற்றும் எதிர்க்கட்சி தலைமையை எடுத்து, தமிழரை மேலும் துயரமடைய வைத்தார். இவர் தான் பயங்கரவாதி. இவரின் தலைமையில் தான் தமிழர் அதிக இழப்புகளையும் அடைந்தனர்.

புலம் பெயர் தமிழரின் செய்திகள்

About இலக்கியன்

மறுமொழி இடவும்