வடமராட்சி கிழக்கு வாடிகளை அகற்ற உத்தரவு!

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமாக நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்களை உடனடியாக வெளியேற்ற கிளிநொச்சி நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மருதங்கேணி பிரதேசசெயலகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான காணிகளை வாடகைக்கு பெற்று வாடிகளை அமைத்து அவர்கள் கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனினும் அனுமதிக்கப்பட்ட பகல் நேரம் மற்றும் கடற்கரையிலிருந்து ஜந்து கிலோமீற்றரிற்கு அப்பால் எனும் நிபந்தனைகளை மீறி தொழிலி;ல் அவர்கள் ஈடுபடுவதால் உள்ளுர் மீனவர்களுடன் மோதல்நிலை தொடர்கின்றது.

எனினும் தென்னிலங்கை மீனவர்களிற்கான வாடிகளை அமைக்க மருதங்கேணி பிரதேச செயலகம் அனுமதி மறுத்திருந்தததுடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை அகற்ற கிளிநொச்சி நீதிமன்றினை நாடியிருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வாடிகளை அகற்ற நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகி விட்டதாக, மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற
வடக்கு – கிழக்கில் பாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் காணப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, வட.மாகாண
ஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன்பட்ட

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*