அமெரிக்கா விலகிவிட்டதால் ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்தை கைவிடவேண்டுமாம்

அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இருந்து விலகியுள்ள நிலையில் அமெரிக்காவால் இலங்கை சம்பந்தமாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் அகற்றப்பட வேண்டும் என்று ரியர் அட்மிரால் சரத் வீரசேகர கூறுகிறார்.

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு சமாந்தரமாக நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்தப் பிரேரணையின் பிரதான அனுசரணையாளர் விலகியுள்ள நிலையில் இலங்கையின் இணை அனுசரணை நீர்த்துப் போகும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை எமக்கு வழங்கிய தொழில்நுட்ப உதவியின் இறுதி பெறுபெறாக அமைந்தது எமக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதே. இது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை இணை அனுசரணை வழங்கியதால் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் அதற்கு ஜனாதிபதியினதோ அல்லது அமைச்சரவையினதோ அனுமதி கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இந்த பிரேரணையின் பிரதான அனுசரணையாளராக இருந்த அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் இருந்து விலகியதன் காரணமாக எமது இணை அனுசரணை தானாகவே நீர்த்துப் போகும் என்று சரத் வீரசேகர கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்