முதலமைச்சர் முடிவுக்கு பலரும் வரவேற்பு!

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லையெனில் புதிய கட்சியில் போட்டியிடுவேன் என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கு கட்சிகள், முன்னாள் போராளிகள், பொது அமைப்புக்கள், மதத் தலைவர்கள் எனப் பலரும் வரவேற்பைத் தெரிவித்துள்ளன.

முதலமைச்சர் உருவாக்கும் கட்சிக்குள் தமிழ் மக்கள் பேரவையில் உள்ள சிவில் அமைப்பு பிரதிநிதிகளையும் அதற்கு வெளியே தன்னைப்போன்று நேர்மையான நிலைப்பாட்டில் உள்ள சிவில் அமைப்புக்களையும் இணைத்து கட்சியை உருவாக்குவது மிகவும் ஆரோக்கியமானதாக அமையும்.

அவ்வாறான கட்சியுடன் எமது கட்சி கூட்டிணைந்து பொது முன்னணி ஒன்றினை உருவாக்கி பொதுச் சின்னம் ஒன்றின் கீழ் முதலமைச்சர் தலைமையில் செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம். இவ்வாறான நிலை உருவானால் தமிழ் மக்களுக்கு நம்பிக்கைதரும் கூட்டாகக் இக்கூட்டு அமையும்.

அது 2004 தேர்தல் காலம் போன்று மிகப்பெரும் எழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கும்.

ஐயாவின் தலைமையில் மக்களுக்காக பேரம்பேசும் நேர்மையான அரசியல் தலைமையாக இந்தக் கூட்டு விளங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு,
உரிமைகளிற்காக குரல் கொடுத்தால் இலங்கை அரசு தனது சலுகைகளை பறித்துக்கொள்ளுமென்பது அப்பாட்டமாக தெரிவதாக முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளார். வடமாகாண
யுத்தத்தில் உயிர் நீத்த தமது பிள்ளைகளை தாய் தந்தையர் நினைவு கூர்ந்து அழுவதையோ,தமது உடன் பிறப்புக்களை சகோதரங்கள் நினைவு கூர்ந்து

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*