சிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்

சீனாவில் தயாரிக்கப்பட்டு, சிறிலங்காவில் பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஆறு புத்தம் புதிய பி.ரி-6 பயிற்சி விமானங்கள் சிறிலங்கா விமானப்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி, இந்த விமானங்களை நேற்று பொறுப்பேற்றார்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்களின் பாகங்கள் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் உள்ள, விமான பொறியியல் பிரிவில் ஒருங்கிணைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த விமானங்கள் சிறிலங்கா விமானப்படையின் 1 ஆவது பயிற்சி அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, சீனக்குடா விமானப்படைத் தளத்தில் நிறுத்தப்படும்.

புதிதாக பயிற்சி பெறும் விமானிகளுக்கு இந்த விமானத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்