சுவிசில் நடைபெற்ற எழுச்சி வணக்க நிகழ்வு!

தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதற்;களப் பலியான பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களினதும்;;; நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக அகிம்சைப் போரில் விதையான தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப்; கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், சிறிலங்கா அரசின் சதியால் படுகொலை செய்யப்பட்ட லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் மற்றும் கேணல் சங்கர், கேணல் ராயூ ஆகியோரோடு தென்தமிழீழத்தின் மட்டுமண்ணில் முதல் களப்பலியான மாவீரர் லெப். பரமதேவா அவர்களினதும், விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினர் லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர் மற்றும் முதற்;களப் பலியான பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களின் நினைவுகள் சுமந்ததுமான இவ்வெழுச்சி நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவித்தலுடன் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம், சுடர்வணக்கம,; மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் தமிழ்த்தாய் இசைக்குழுவினரோடு இளம் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.

தாய்நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்திற் கொண்டு ஆயுதமேந்தி இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக வீரப்பெண்ணாக விடுதலைக்காய் வீறு கொண்டெழுந்து வித்தாகி வீழ்ந்த 2ம் லெப் மாலதி அவர்களின் நினைவு நாளானது தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக நினைவுகூரப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது.

மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், கவி வணக்கங்களோடு நினைவுப் பேருரைகளும் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன. 

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

தொடர்டர்புடைய செய்திகள்
கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் 1999 ஆம் ஆண்டின் இதே நாளில், கடல்வள ஆராட்சியில் ஈடுபட்டிருந்தவேளை
சிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை அடுத்து, அலரி மாளிகையில் ஐதேகவின் நாடாளுமன்ற
20.10.2018 அன்று பீலபெல்ட் நகரில் சிறப்பாக இயங்கிவரும், சலங்கை நாட்டியாலயம் அக்கடமியின் 10வது ஆண்டு நிறைவு நிகழ்வு விழா, கோலாகலமாக

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*