தனது கொள்­கை­யு­டன் ஒத்­துப்­போ­னால் தமிழ் அர­சுக் கட்­சி­யும்­ கூட்­ட­ணி­யில் இணைந்து கொள்­ள­லாம்-சி.வி.விக்­னேஸ்­வ­ரன்

காரை­ந­கர் பிர­தேச சபை­யின் கசூ­ரினா சுற்­று­லா­மை­யத்­தில் முத­ல­மைச்­ச­ரின் அமைச்­சின் மாகாண குறித்­தொ­துக்­கப் பட்ட அபி­வி­ருத்தி நன்­கொடை நிதி­யின் கீழ் அமைக்­கப்­பட்ட அம்­மாச்சி உண­வ­கக் கட்­ட­ட­தி­றப்­பு­விழா நேற்றுமாலை இடம்­பெற்­றது.இந்த நிகழ்­வில் கலந்­து ­கொண்டு உரை­யாற்­றிய வடக்கு மாகாண சபை­யின் முன்­னாள் உறுப்­பி­னர் கஜ­தீ­பன் தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் தமிழ்த் தரப்­பு­க­ளுக்­குள் பிள­வு­கள் ஏற்­ப­டக்­கூ­டாது என்று வலி­யு­றுத்­தி­னார்.மேலும் முதல்­வர் இதனை உணர்ந்து ஒற்­று­மையை சிதைக்­காது ஒரு­மித்து செயற்­ப­ட­வேண்­டும் எனக் கோரி­னார்.

மேற்படி கயதீபனின் கூற்றுக்கு பதிலளித்த சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தமது கொள்­கை­யு­டன் ஒத்­துப்­போ­னால் தமிழ் அர­சுக் கட்­சி­யும்­ கூ­டத் தனது கூட்­ட­ணி­யில் இணைந்­து­ கொள்­ள­லாம் என்று தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்