கொழும்பு அரசியல் அதிரடி(?) நடந்தது என்ன…?

சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இருந்துவரும் சூழலில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராசபக்சே சிறிலங்காவின் பிரதமராக சனாதிபதி மைத்திரிபால சிறீசேன முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்துள்ள நிகழ்வான கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பின்னணி குறித்த அலசல்….

இன்றைய நிலையில் சிறிலங்காநாடாளுமன்றத்தில் 2015 பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரம்….

ஐக்கிய தேசியக் கட்சி – 106
சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 95
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 16
மக்கள் விடுதலை முன்னணி – 6
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 1
இலங்கை முஸ்லீம் கொங்கிரஸ் – 1

இந்த அடிப்படையில் அதிக ஆசனங்களுடம் பலமாக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியை ஓரம்கட்டிவிட்டு இன்றைய அரசியல் பரபரப்பு நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதைவிட நடந்திருக்க முடியாது என்பதே யதார்த்தம் ஆகும்.

பிரதமர் ஒருவர் பதவியில் தொடர்கையில் இன்னொருவரை பிரதமராக நியமிக்க அரசியலமைப்பில் இடமில்லை.

அதிகூடிய நாடாளுமன்ற ஆசனங்களை தன்னகத்தே வைத்திருக்கும் ரணில் விக்கிரம சிங்கவையோ ஐக்கிய தேசியக் கட்சியையோ முழுமையாக புறந்தள்ளிவிட்டு மைத்திரி-மகிந்த கூட்டிணைவு நடந்திருக்க முடியாது.

இந்த பின்னணியில் தான்…

அலரி மாளிகையில் ரணில் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தலைவர்கள் அவசர ஆலோசனை…

ரணில் தான் நாட்டின் பிரதமர்….

மகிந்தவின் நியமனம் சட்டவிரோதமானது….

மகிந்தவிற்கு இசுலாமிய கட்சிகள், ஆறுமுகம் தொண்டைமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆதரவு…

கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் பரபரப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் ஆலோசித்து நாளை கருத்து வெளியிடப்படும்…

இவ்வாறான செய்திகள் சுடச்சுட வந்துகொண்டேயிருக்கின்றது. இந்த பரபரப்பின் பின்னணியை மேலோட்டமாக பார்க்கும் போது இந்த பரபரப்பின் மையம் புதுடெல்கியில் நிலைகுத்தி நிற்பதை அவதானிக்க முடியும்.

நல்லாட்சி அரசின் பின்னணியில் அரசியல் அரங்கில் ஓரங்கட்டப்பட்டிருந்த மகிந்த ராசபக்சேவை இந்திய பிரதமர் மோடி சந்தித்தது…

தன்னை கொலை செய்ய இந்திய உளவு அமைபான ‘றோ’ முயற்சித்ததாக சிறிலங்கா சனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டியதாக செய்தி…

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்கி பயணம். இந்திய பிரதமர் மோடியுடன் ஆலோசனை….

இந்த செய்தி தலைப்புகளின் பின்னால் உள்ள ஆடு-புலி ஆட்டத்திற்கும் இன்றைய கொழும்பு அரசியலின் பரபரப்பிற்கும் நிச்சயம் தொடர்பிருக்கலாம் என்பதே மேற் கூறப்பட்ட விடயங்கள் சொல்லும் முடிவாகும்.

ஈழதேசம் இணையம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்