அரசாங்கத்தின் பேச்சாளர்களாக மஹிந்த சமரசிங்ஹ மற்றும் கெஹலிய நியமிப்பு

புதிய அரசாங்கத்தின் பேச்சாளர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான, ​மஹிந்த சமரசிங்ஹ மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகிய இருவ​ரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கூட்டரசில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெளியேறிய நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அரசாங்கத்தின் பேச்சாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான, ​மஹிந்த சமரசிங்ஹ மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகிய இருவ​ரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக முன்னர் பதவிவகித்த காலத்திலும் கெஹலிய ரம்புக்வெலவே அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி யுத்தத்தின்போது ஊடகப் பேச்சாளராக இருந்த ஹெகலிய ரம்புக்வெல பொய்யான தகவல்களை வழங்கி அரசாங்கத்தின் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை மூடிமறத்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்