நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்கா அழுத்தம்

சிறிலங்கா நிலவரங்கள் குறித்து கரிசனையுடன் கவனித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சிறிலங்கா அதிபருக்கும், சபாநாயகருக்கும் அழுத்தம் கொடுத்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர், ஹீதர் நுவேட் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவின் நிலவரங்களை அமெரிக்கா தொடர்ந்தும் கரிசனையுடன் கவனித்து வருகிறது.

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகருக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

யார் அரசாங்கத்துக்கு தலைமையேற்பது என்பதை உறுதி செய்யும் பொறுப்புக்களை நிறைவேற்ற, சிறிலங்கா மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை, அனுமதிக்க வேண்டும்.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்