வாக்குறுதிகள் பொய்யாகி போன நிலையில் 175 ஆவது நாளாக தொடரும் அவலம்

முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி போன நிலையில் இன்று 175 ஆவது நாளாகவும் கொட்டும் மழை, வெயில், பனி அனைத்தையும் கடந்து வீதியோர அவல வாழ்வை தொடர்ந்து வருகின்றனர் கேப்பாபுலவு மக்கள்.

இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கும் மக்கள் போராட்டம் இன்று 175 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி போன நிலையில் தமக்கு சொந்தமான அனைத்து நிலங்களும் விடுவிக்கப்படும் வரை தமது நில மீட்புப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் கேப்பாபுலவு மக்கள் திட்டவட்டமாக
அறிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்