உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோருகிறது அமெரிக்கா

அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹீதர் நவேர்ட் தமது அதிகாரபூர்வ கீச்சகப் பதிவில் தெரிவித்திருப்பதாவது-

“அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் கோருகிறோம்.

நாடாளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமடைவது, சிறிலங்காவில் நிச்சயமற்ற நிலை மேலும் தீவிரமடைவதுடன், அதன் அனைத்துலக மதிப்பையும் பாதிக்கும்.

அத்துடன், நல்லாட்சி, உறுதித்தன்மை, பொருளாதார வளர்ச்சி குறித்த சிறிலங்கா மக்களின் அபிலாசைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்” என்றும் அதில் கூறியுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
சிறிலங்காவில் அனைத்து தரப்புகளும் வன்முறைகளில் இருந்து விலகி, சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும்
அமெரிக்க அதிபர் டிரம்புடைய அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து தனது உறுப்புரிமையை நீக்கிக் கொள்வதற்கு தீர்மானம் எடுத்துள்ளது. அமெரிக்காவின்
2018 நிதி ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்க

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*