பதவியில் இருந்து இறங்க மறுக்கும் மகிந்த

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நிராகரித்துள்ள, அரசாங்கத் தரப்பு, மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகமாட்டார் என்று அறிவித்துள்ளது.

இன்று காலை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும். அதனை ஏற்க முடியாது என்றும், அமைச்சர்கள் தினேஸ் குணவர்த்தனவும், விமல் வீரவன்சவும் தெரிவித்தனர்.

நிலையியல் கட்டளைகளை சபாநாயகர் மீறியிருப்பதாகவும், சட்டவிரோதமான இந்த வாக்கெடுப்பை தாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன், இந்த வாக்கெடுப்பை நிராகரிப்பதால், மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராகப் பதவியில் நீடிப்பார் என்றும், அவரது அரசாங்கம் தொடர்ந்து பதவியில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனால் சிறிலங்கா அரசியல் குழப்பங்கள் இன்னும் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்