மகிந்த மீது குற்றம் சுமத்தும் சரத்பொன்சேகா!

மஹிந்த மற்றும் அவரது கூட்டத்தினர் பல லட்சிம் ரூபாய் செலவளித்து வாழ்வினை நன்கு அனுபவித்து வாழ்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு நாடாளுமன்ற அமர்வுக்கு 250 லட்சம் செலவளிக்கப்படுகின்ற நிலையில், இன்றையதினம் நாடாளுமன்ற அமர்வு சில நிமிடங்கள் மாத்திரமே இடம்பெற்றது.

தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா,

“தான்தோன்றித்தனமாக அரசாங்கத்தினை கலைத்தனர். சட்டவிரோதமான முறையில் பிரதமரை நியமித்துக் கொண்டனர். இதுவரையிலும் சபாநாயகரின் இறுதித் தீர்மானமாகக் காணப்படுவது அரசாங்கமொன்றும், பிரதமரொருவரும் இல்லையென்பதாகும்.

எனினும் அவர்கள் பிரதமருக்கு, அமைச்சர்களுக்கு உள்ள சிறப்புரிமைகளைப் பயன்படுத்துகின்றனர். ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்துகின்றனர். நாடளாவியரீதியில் பயணங்களை மேற்கொள்கின்றனர். விஜேராம மாவத்தையிலிருந்து நாடாளுமன்றுக்கு வருவதும் ஹெலிகொப்டரில்.

இவ்வாறு நாடாளுமன்றுக்குள் செலவளிக்கப்படும் தொகைக்கும் 10, 15 மடங்கு மேலாக அவர்கள் வெளியில் செலவு செய்கின்றனர். இந்த நாட்களில் அனுபவித்து வாழ்கின்றனர்.” எனத் தெரிவித்தார்

About இலக்கியன்

மறுமொழி இடவும்