தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது கண்டுகொள்ளாத சர்வதேசம் இப்போது அக்கறை காட்டுவது ஏன்? – சிவாஜிலிங்கம்

தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது கண்டுகொள்ளாத சர்வதேசம் தற்போது இந்த ஜனநாயகம் பறிபோய்விட்டது என கூறுவது வேதனையளிக்கின்றது என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் அவர் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும், தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது கண்டுகொள்ளாத சர்வதேசம் தற்போது இந்த ஜனநாயகம் பறிபோய்விட்டது என கூறுவது வேதனையளிக்கின்றது

ஆகவே இன்று ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் மேற்குலகம், அன்று நடந்த சம்பவங்கள் தொடர்பில் கவனித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என அவர் கூறினார்.

இலங்கைக்குள் ஒரு தீர்வு கிடையாது எனவே, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வேதேச சமூகமும் இணைந்து பொது வாக்கெடுப்பை நடத்தி அரசியல் பிரச்சினைக்கு தீர்வை காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்