மாவீரர் நாளுக்கு தடை இல்லை – நீதிமன்றம்

தற்போது, சிறிலங்கா இராணுவத்தின் 512 ஆவது பிரிகேட் தலைமையகம் அமைந்துள்ள, கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக, மாவீரர் நாள் நிகழ்வை நடத்தும் போது, விடுதலைப் புலிகளின் கொடி மற்றும் சின்னங்களைப் பயன்படுத்த தடைவிதித்து, யாழ். நீதிவான் நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டுள்ளது.

இராணுவத்தின் 512 ஆவது பிரிகேட் தலைமையகத்துக்கு முன்பாக, உள்ள தனியார் காணியில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் இறந்து போன உறுப்பினர்களின் நினைவாக மாவீரர் நாளை நடத்த ஒழுங்குகள் செய்யப்படுவதாகவும் அதற்குத் தடை விதி்க்கக் கோரியும், கோப்பாய் காவல்துறையினர் யாழ். நீதிவான் நீதிமன்றில் மனு செய்திருந்தனர்.

இந்த மனு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான், சதீஸ்வரன் முன்னிலையில் நேற்று மாலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, மாவீரர்நாள் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் கொடிகள், சி்ன்னங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்படுவதாக நீதிவான் உ்த்தரவிட்டுள்ளார்.

எனினும், மாவீரர் நாளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுவது தொடர்பாக அந்த உத்தரவில் ஏதும் கூறப்படவில்லை.

About இலக்கியன்

மறுமொழி இடவும்