வல்வெட்டித்துறையில் தேசியத் தலைவரின் இல்லம் முன்பாக நான்கு இளைஞர்கள் கைது

வல்வெட்டித்துறையில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் இன்று தமிழர் வாழும் உலகமெங்கும் கொண்டாடப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் இன்று பிரபாகரனின் சொந்த இடமான வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்திக் முன்பாக உள்ள பற்றறைகளை வெட்டி துப்பரவுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே குறித்த நான்கு இளைஞர்களும் வல்வெட்டித்துறைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை பிரபாகரனின் வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்திற்கு மக்கள் வந்து செல்வதை விரும்பாத சிறிலங்கா அரசாங்கம் அவரது இல்லத்தினை சில வருடங்களுக்கு முன்னர் தகர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 64 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட முற்பட்ட
யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் தமிழீழத் தேசியத்தலைவரின் 64 வது அகவை நாள் வெகு விமர்சையாகக் மாணவர்களால் கொண்டாடப்பட்டது.    
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணி

About இலக்கியன்

மறுமொழி இடவும்