முன்னாள் பெண் போராளிகள் மீது கவனம் செலுத்துங்கள்: தவமணி

சமூக மயப்படுத்தப்பட்ட முன்னாள் பெண் போராளிகளுக்கு புலம் பெயர் சமூகம் உதவிகளை வழங்க முன் வர வேண்டும் என புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் உறுப்பினரான சுப்ரமணியம் தவமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தாம் அனுபவித்த வேதனைகள் எதனையும் பொருட்படுத்தியதில்லை என தெரிவித்த அவர், புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து முன்னாள் பெண் போராளிகள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான ஊடக சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் நால்வர் சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப்
இலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் காவல் துறையினர் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை முன்னாள் போராளிகள் உட்பட

About இலக்கியன்

மறுமொழி இடவும்