புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன!

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். விசேட காவல்துறைப் பிரிவினரும் புலனாய்வுத்துறையினரும் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் அவர்களுக்கு இராணுவத்தினரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தனியொரு சம்பவம் என்ற போதிலும் நாட்டின் தற்போதைய சூழலில் இதனை புறக்கணிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள இராணுவதளபதி உடனடி விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இவ்வாறன குற்றங்களுக்கெதிராக குரல்கொடுக்கவேண்டும் எனவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன எனவும் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்