நாடாளுமன்றம் கலைப்பு: தீர்ப்பு அடுத்தவாரம் வெளியாகும் – சுமந்திரன்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற விசாரணையின் போது, நீதிமன்றத்தில் பிரசன்னமாகி அதுகுறித்து கறுத்தது தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நீதிமன்ற விவாதங்கள் இன்றுடான் 4 நாட்கள் நடைபெற்றது. இறுதி விவாதங்களை கேட்ட நீதிபதிகள் விரைவில் தமது முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளனர். அதற்கான தினம் குறிக்கப்படாத நிலையில், அதுவரை இடைக்கல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும்”என கூறினார்.

இதேவேளை மேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ மேன் முறையீடு மனு தொடர்பிலும் கேள்வியெழுப்பப்பட்ட்டது. இதற்கு பதிலளித்த அவர், “இது தொடர்பில் எமக்கு தெரியாது. இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் தினங்களில் எடுத்துக்கொள்ளப்படும்” என கூறினார்.

மேலும் உதய கம்மன்பில தற்போது மஹிந்த ராஜபக்ஷவே பிரதமர் என கூறுகின்றார் இது தொடர்பில் கருத்து தெரிவித்த , ” தற்போது நாட்டில் பிரதமர் இல்லை. அத்தோடு மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் இல்லை” என கூறினார்.

தொடர்டர்புடைய செய்திகள்
எதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு,மற்றும் கண்டனப்பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவை
“தமிழ் மக்களின் இனப்படுகொலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் ஒரு தீர்க்கமான
அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை வரும் மே 31ஆம் நாளுக்கு முன்னதாக, நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா அதிபர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*