கூரேக்கு எதிராக மைத்திரியிம் கோள் சொன்ன சிறீதரன்!

இரணைமடுக்குள திறப்பு விழாவிற்கு தம்மை அழைக்கவில்லையென வடமாகாண ஆளுநரிற்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் புகார் செய்துள்ளார்.இந்த விடயத்தை அவர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி வரையில் கொண்டு சென்றிருந்தார்.

அண்மையில் புனரமைக்கப்பட்ட இரணைமடு குள அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி வருகை தந்திருந்தார்.எனினும் ரணிலிற்கு முகம் கொடுக்க அஞ்சி கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரி வருகையினை தவிர்ந்திருந்தனர்.

எனினும் கிளிநொச்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மட்டும் பொதுமக்களுடன் வேடிக்கை பார்த்து கலைந்து சென்றிருந்தார்.அவருடன் அவரது உதவியாளர்களான பிரதேச சபை தலைவர்களும் நிகழ்வை எட்டிப்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் கெர்ழும்பில் மைத்திரியுடனான சந்திப்பில் தமக்கு அழைப்பு அனுப்பியிருக்கவில்லையென ஆளுநருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து மைத்திரி ஆளுநர் கூரேக்கு தொலைபேசி அழைப்பு எடுக்க அவரோ மைத்திரிக்கு எதிராக கூட்டமைப்பின் பிரச்சாரங்களை எடுத்துவிட்டுள்ளார்.

இதனையடுத்து சீற்றமடைந்த மைத்திரி அத்துடன் விடயத்தை கைவிட்டு அடுத்த விடயத்திற்கு தாவியுள்ளார்.

ஏற்கனவே வடக்கு ஆளுநர் சிறீதரனின் போட்டி அரசியலாளராக சந்திரகுமாரின் நெருங்கிய சகாவாக இருப்பதுடன் மதுபான விருந்துக்கு அவரை அடிக்கடி அழைப்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
இறையாண்மை கொண்ட நாடு என்ற சிறிலங்காவின் அடையாளத்தை இந்தியாவும் சீனாவும், மதிக்க வேண்டும் என சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச
மக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
யாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர், காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவில்

About இலக்கியன்

மறுமொழி இடவும்