முல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளின் கடற்கரையினை பாரிய அலைகள் தாக்கியுள்ளதுடன், பல கரையோரக் கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் நகர்ந்து செல்லும் புயல் காரணமாக முல்லைத்தீவு கடலில் சீற்றம் அதிகரித்து காணப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், முல்லைத்தீவின் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களின் வாடிகள், வலைகள் மற்றும் படகுகள் என்பன கடல் அலையினால் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் முல்லைத்தீவு கள்ளப்பாடு, தீர்த்தக்கரை வரையான கடற்கரையோர வீதிகளில் கடல்நீர் மக்களின் வாழிடங்களுக்குள் உட்புகுந்துள்ளது. குறித்த அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் கிராம அலுவலகர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்