தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்கள், கேணல் பருதி ஆகியோரின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ் 22.12.2018

சுவிசில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்சுக் கிளையின் பொறுப்பாளர் கேணல் பருதி அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்சுக்; கிளையின் பொறுப்பாளர் கேணல் பருதி அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 22.12.2018 சனிக்கிழமை அன்று லுட்சேர்ன் மாநிலத்தில் சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலரஞ்சலி செலுத்தப்பட்ட வேளையில் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.

மாவீர வித்துக்களான அரசியல் பெருந்தகைகள் மற்றும் புலத்தில் அயராது உழைத்த கேணல் பருதி அவர்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக இளையோர்களின் எழுச்சி நடனங்கள், காலத்தின் தேவை கருதிய சிறப்புரையோடு, கவிதையும் இடம்பெற்றதுடன் மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்த காணொளிக் காட்சித் தொகுப்புக்களும் அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டதோடு, அரங்கம் நிறைந்து நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமையானது மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

தொடர்டர்புடைய செய்திகள்
மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ
யேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக
ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் பெருவெளியில் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இறுதி யுத்தத்தில் தனது தாயாரை இழந்த

About இலக்கியன்

மறுமொழி இடவும்