போரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் வழங்கிவைப்பு!

திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியைச் சேர்ந்த பிரித்தானியா வாழ் புலம்பெயர் உறவு சிங்கவாகனம் இராஜசுந்தரம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் அனுசரனையுடன் போரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 1-5 வரையான வகுப்பில் இருந்து 50 மாணவர்கள், 6-11 வரையான வகுப்புகளில் இருந்து 35 மாணவர்களும், உயர்தர வகுப்பில் இருந்து 15 மாணவர்களுமாக தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களுக்கும், தேவிபுரம் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த 1-5 வரையான வகுப்புகளைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 20 மாணவர்களுக்கும் இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்கு உதவும் நல் எண்ணத்தில் திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியைச் சேர்ந்த பிரித்தானியா வாழ் புலம்பெயர் உறவு சிங்கவாகனம் இராஜசுந்தரம் அவர்கள் கடந்த ஒரு வருடமாக சிறு சிறு தொகையாக உண்டியலில் இட்டு சேமித்த இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தொகையிலேயே இவ் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் மனிதாபிமான உதவியை மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் அனுசரனையுடன் போரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி, படங்கள் இரா.மயூதரன்.

தொடர்டர்புடைய செய்திகள்
விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகளாக இருந்தனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அத்துடன்,
திரும்பவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருடன் சேர்ந்து இணங்கி போவம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. எனவே இது பற்றி எதுவும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்