மாலியிலுள்ள இலங்கை இராணுவம் நாடு திரும்பாது – இராணுவப் பேச்சாளர்

மாலியில், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தினரை விலக்கிக் கொள்வது குறித்து இதுவரையில் எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

மாலியின் மத்திய பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை இராணுவ அணி ஒன்று கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியதில், இரண்டு இலங்கை இராணுவத்தினர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

இவ்வாறு கப்டன் தர அதிகாரி மேஜராகவும், கோப்ரல் தர அதிகாரி சார்ஜன்ட்டாகவும் நேற்று பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இராணுவ அணி தாக்குதலுக்குள்ளாகிய போதிலும், மாலியில் தொடர்ந்தும் தமது படையினர் தங்கியிருப்பர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “மாலியில், இருந்து இராணுவத்தினரை விலக்கிக் கொள்வது குறித்து எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு மாலியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் கொழும்புக்குத் திரும்பமாட்டார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள், வழங்கப்படும். ஐ.நாவின் மூலமும் இழப்பீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும்” என குறிப்பிட்டார்.

தொடர்டர்புடைய செய்திகள்
டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து 16ஆவது மக்களவையை கலைத்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். இதனை
வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸுக்கு
மாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை

About இலக்கியன்

மறுமொழி இடவும்