சிம் அட்டைகள் உரியவர்களின் பெயர்களில் சரியாக பதியப்படவேண்டும் – அமைச்சரவை அங்கீகாரம்!

உரிய தகவல்களுடன் பதிவு செய்யப்படாத சிம் அட்டைகளை பதிவு செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான யோசனை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் அலர் இதனைத் தெரிவித்தார்.

சிம் அட்டைகளை பயன்படுத்தி பல்வேறு குற்றச்சாட்டுகளும், மோசடிகளும் இடம்பெறுகின்றன என்று இணங்காணப்பட்டுள்ளது. ஒருவர் பல சிம் அட்டைகளை பயன்படுத்திக் குற்றங்களில் ஈடுபடுகின்றார் என்பதைச் சுட்டிக்காட்டி இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

கையடக்கத் தொலைப்பேசிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற குற்றங்களை கட்டுப்படுத்துவதையும், தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதையும் உறுதிப்படுத்துவதற்கான தகவல்களை உள்ளடக்கி சிம் அட்டைகளை பதிவுசெய்வது அத்தியவசியமாகியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்