முன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சரும் ஈழ ஆதரவாளருமாகிய ஜோர்ஜ் பெர்னான்டஸ் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தனது 88வது வயதில் இன்று காலை புதுடில்லியில் காலமானார்.

சமீப காலமாக அல்சைமர் எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜோர்ஸ் பெர்னான்டசுக்கு, சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டிருந்தது.

இன்று காலை 6 மணியளவில் அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து புதுடெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் மரணமானார்.

மூத்த தொழிற்சங்கத் தலைவரான ஜோர்ஜ் பெர்னான்டஸ், ஊடகவியலாளராக, விவசாயியாக, அரசியல்வாதியாக பன்முக ஆளுமை கொண்டவர்.

முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் உருவாக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர்,பின்னர் சமதா கட்சியை நிறுவினார்.

கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர், மகாஷ்டிரா, பிகார் மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு ஐந்து தடவைகள் உறுப்பினராகத் தெரிவானவர்.

வி.பி. சிங் அமைச்சராவையில் மத்திய தொடருந்து துறை அமைச்சராகப் பணியாற்றிய இவர், அடல் பிகாரி வாஜ்பாயி அரசாங்கத்தில், பாதுகாப்பு அமைச்சராக இரண்டு தடவைகள் பதவி வகித்திருந்தார்.

ஈழத் தமிழரின் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக செயற்பட்ட, இந்தியத் தலைவர்களில் முக்கியமானவர் ஜோர்ஜ் பெர்னான்டஸ்.

ஈழத் தமிழரின் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
இடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப்
ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பரப்புரைப் பேரணி நேற்று கொழும்பு காலிமுகத் திடலில்

About இலக்கியன்

மறுமொழி இடவும்