முன்னணி உறுப்பினர் மீது கொலை முயற்சி!

யாழ்ப்பாணத்தில் ஏட்டிக்கு போட்டியாக நடந்துவரும் குழு மோதல்களின் தொடர்ச்சியாக திருநெல்வேலி கொக்குவில் கருவப்புலன் வீதியில் வீட்டினில் தரித்திருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்படடுள்ளது. இன்று செவ்வாய்கிழமை பட்டப்பகலில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வாகனங்களையும் குழுவொன்று தீயிட்டு கொழுத்தியுள்ளது.

யாழ்.மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை போராடி கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்திருந்தனர்.

இதேவேளை யாழ்.மாநகர சபை உறுப்பினரின் வீட்டுக்கு சென்ற வாள் வெட்டுக்குழு உறுப்பினரை தாக்க முயற்சித்த போது, உறுப்பினர் தப்பி சென்றுள்ளார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் செ.ரஜீவ்காந்தின் மீதே தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உறுப்பினரின் வீட்டிற்கு இன்று செவ்வாய்க்கிழமை மூன்று மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறுக்கும் மேற்பட்டவர்கள் வாளுகளுடன் வீட்டிற்குள் புகுந்து உறுப்பினர் மீது தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
யேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக
ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் 3 ஆம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய
வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனம் தனித்தன்மை கொண்ட ஒரு இறையாண்மை தேசிய இனமாகும். தாயகத்தமிழகம்,தமிழீழம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்