முழு அடைப்புப் போராட்டத்திற்கும் ஆதரவாக மன்னார் மாவட்டம்!

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (25) கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும், வர்த்தகர்களும் பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

மன்னாரில் இருந்து அரச மற்றும் தனியார் பேரூந்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதோடு,எவ்வித சேவைகளும் இடம் பெறவில்லை.

பாடசாலைகளுக்கு குறிப்பிட்ட அளவு மாணவர்கள் சென்றுள்ள போதும், போக்குவரத்து சேவைகள் இல்லாமையினால் அதிகளவான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்லவில்லை.

மேலும் மன்னாரில் உள்ள அரச, தனியார் அலுவலங்களுக்கும் பணியாளர்கள் சமூகமளிக்கவில்லை.

இதனால் மன்னார் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதோடு,மன்னாரில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மூடப்பட்டுள்ள போதும் ஒரு சில உணவகங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
ஒற்றையாட்சி அரசமைப்பை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இந்த
திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர்
தமிழர் வரலாற்றை மீண்டும் புதுப்பித்த விடுதலை இயக்கத்தின் வரலாற்றை அழிக்கும் சிங்கள அரசின் புலி நீக்க அரசியலின் முக்கிய பகுதியாக

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*