பாகிஸ்தானுக்கான இலங்கை விமான சேவை தற்காலிகமாக இரத்து!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் காரணமாக விமான சேவையை நிறுத்தி வைப்பதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானிய வான்வழி பயணங்களை பாகிஸ்தான் மூடியுள்ள நிலையில், கராச்சி மற்றும் லாகூருக்கு நாளை (வியாழக்கிழமை) செல்லவிருந்த விமானங்களே தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சி மற்றும் லாஹூர் நோக்கி செல்வதற்கு தயாராகவிருந்த பயணிகள் தங்களின் விமான பயணச்சீட்டிற்கான முகவர்களை தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமது பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு செயற்படுவதாகவும் ஶ்ரீலங்கன் விமான சேவை குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாட்டு படைகளுக்கும் இடையிலான தாக்குதல் நீடிக்கின்றது.

இதற்கிடையில் இரு இந்திய போர் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது. இதனால் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்