கம்பரெலியவில் காசடிக்கும் சிறிதரன் எம்.பி

கம்பரெலிய( ஊரெழுச்சி) திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதிகள் செப்ப னிடும் பணிகளில் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள் ளனா்.

கிளிநொச்சியில் கம்பரெலிய திட்டத்தை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குத்தகைக்கு எடுத்துள்ளார். கடந்த ஒக்ரோபர் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சின் போது ரணிலுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்ததற்கான வெகுமதிகளில் ஒன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீதி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு எனக் கூறி கம்பரெலிய திட்டம் ஊடக பெருந்தொகை பணம் சன்மானமாக வழங்கப்பட்டிருந்தது.

அப் பணித்தில் முடிந்தவரையான கொள்ளையடிப்புக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கிளிநொச்சியில் சிறிதரனின் ஊழல் முறைகேடு உச்சம் பெற்றுத் திகழ்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வீதித் திருத்தப் பணிகளின் போது, முறையான தொழிநுட்ப மேற்பார்வை இல்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட நியமங்களுக்கு அமைவாகபணிகள் மேற்கொள்ளப் படாது, தரமற்ற அபிவிருத்திப் பணிகளை ஒப்பந்தகாரர்கள் முன்னெ டுத்து வருகின்றனர்.

வீதி அபிவிருத்திப் பணிகளின் தரம் தொடர்பில் முறையான தொழிநுட்ப மேற்பார் வை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, மாவட்ட உயரதிகாரிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
யேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக
ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் 3 ஆம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய
வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனம் தனித்தன்மை கொண்ட ஒரு இறையாண்மை தேசிய இனமாகும். தாயகத்தமிழகம்,தமிழீழம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்