பிரிகேடியர் கடாபியின் தாயார் இயற்கை எய்தினார்!

பிரிகேடியர் கடாபி அவர்களின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி இன்று இயற்கை எய்தினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரும், சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்பு நடவடிக்கைக்கான தளபதியும்,
தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை அர்ப்பணித்த தளபதியும், படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும், அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்தவருமான பிரிகேடியர் ஆதவன் (கடாபி) அவர்களின் தாயாரே ஆறுமுகம் மகேஸ்வரி அம்மையார்.

வன்னி இறுதி யுத்தத்தின் போது ஆனந்தபுரத்தில் தமிழீழத் தேசியத் தலைவரை இருந்த இடத்தை சிங்களப் படைகள் முற்றுகையிட்டுத் உக்கிர சமர் நடந்த போது முற்றுகையை உடைத்து தேசியத் தலைவரை பாதுகாப்பாக நகர்த்திய தங்கள் உயிரை ஈய்ந்த வீரத் தளபதிகளில் பிரிகேடியர் கடாபியும் ஒருவர். ஆனந்தபுரச் சமரில் முதுநிலைத் தளபதிகளான பிரிகேடியர் கடாபி (ஆதவன்), பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் விதுஷா, பிரிகேடியா துர்க்கா, பிரிகேடியர் மணிவண்ணன் உட்பட கேணல் நிலை கொண்ட இளநிலைத் தளபதிகளும் வீரச்சாவடைந்தனர்.

ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்த இவரை அக்களமுனையிலிருந்து அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அது முடியாமல் போகவே தமிழீழப் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக் கொண்டவர் என்பது நினைவூட்டத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
யேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக
ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் 3 ஆம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய
வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனம் தனித்தன்மை கொண்ட ஒரு இறையாண்மை தேசிய இனமாகும். தாயகத்தமிழகம்,தமிழீழம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்