சிறிலங்கா வருகிறது சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழு

சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில், இந்தக் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

எனினும், குழுவின் பயண நாட்கள் தொடர்பான விபரங்கள், மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் கடந்த பெப்ரவரி 18ஆம் நாள் தொடக்கம் 22 ஆம் நாள் வரை நடந்த சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழுவின் இரகசியக் கூட்டத்திலேயே சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கான பயணம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரித்தானியா, காபோன், செனகல், கானா, பல்கேரியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்த இந்தக் குழு தற்போது மேலதிகமாக சிறிலங்கா, ஆஜென்ரீனா, பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
யேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக
ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் 3 ஆம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய
வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனம் தனித்தன்மை கொண்ட ஒரு இறையாண்மை தேசிய இனமாகும். தாயகத்தமிழகம்,தமிழீழம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்