குற்றம் செய்தவர் தண்டிக்கப்படவேண்டுமாம் -சரத்

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஏதாவது தவறு செய்திருந்தால், அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

”முன்னாள் கடற்படை தளபதி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டால், தண்டிக்கப்பட வேண்டும்.

தமது மேல்மட்டத்தை திருப்திப்படுத்துவதற்காக, 12 இளைஞர்களைக் கடத்தி கொலை செய்வதற்கு உத்தரவிட்டிருந்தால், அவர் மீது சட்டத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாங்கள் போர் வீரர்களைத் தான் பாதுகாப்போம், குற்றவாளிகளை அல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது பல்வேறு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக எதிர்வரும் 21ஆம் நாள் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க மேலும்
இன்று இந்த நாட்டில் எமது விருப்பத்துக்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நாவின்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*