நாளை தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனை திறப்பு விழா

தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மக்கள் பணிமனை 10-03-2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு இல 258, துர்க்கை அம்மன் வீதி, ஆனந்தபுரம் என்ற முகவரியில் திறந்துவைக்கப்படுகிறது.

கட்சியின் செயலாளர் நாயகமும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இந்த பணிமனையை திறந்துவைப்பார். கட்சியின் பல முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று தமிழ் மக்கள் கூட்டணி செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றடுக்கும் வகையில் எமது அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார செயற்பாடுகளில் இணைந்து செயற்படவருமாறு தமிழ் மக்கள் அனைவரையும் அழைப்பதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
யேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக
ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் 3 ஆம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய
வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனம் தனித்தன்மை கொண்ட ஒரு இறையாண்மை தேசிய இனமாகும். தாயகத்தமிழகம்,தமிழீழம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்