பொள்ளாச்சி ஜெயராமன் மீது சந்தேகப்படும் டிடிவி. தினகரன்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் செய்தியாளரிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பில்லை என காவல்துறை கண்காணிப்பாளர் அளித்த பேட்டி, மக்கள் மத்தியில் பெரிய சந்தேகத்தை உண்டாக்கி இருப்பதாகவும் கூறினார்.

இதில் பொள்ளாச்சி ஜெயராமன் அரசியல் பின்னணி இல்லை என்று அவரே முன்வந்து தீர்க்கமாக சொன்னதால் சந்தேகத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

பொள்ளாச்சி ஜெயராமன் அவரே காவல்துறை அதிகாரி போன்று பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் அளிக்க கூறுவது, என் அப்பன் குதுருக்குள் இல்லை என்பதை உணர்த்துவதாக கூறினார்.

உண்மை தானாகவே வெளிவரும் என்றும் டிடிவி தினகரன் பதிலளித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்