சிறிலங்காவுக்கான புதிய தூதுவரை அறிவித்தது பிரித்தானியா

சிறிலங்காவுக்கான புதிய பிரித்தானிய தூதுவராக சாரா ஹல்டன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம் அறிவித்துள்ளது.

கொழும்பில் பிரித்தானியத் தூதுவராகப் பணியாற்றும் ஜேம்ஸ் டௌரிஸ், மற்றொரு இராஜதந்திர சேவைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையிலேயே புதிய தூதுவராக சாரா ஹல்டன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவில் தமது கடமைகளைப் பொறுப்பேற்பார்.

பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தில் மனித வள பணியகத்தில் பிரதிப் பணிப்பாளராக தற்போது பணியாற்றும் சாரா ஹல்டன், முன்னதாக, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின் கொரிய விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவராகவும், சிம்பாப்வேயில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் பிரிவுக்கான தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியவர் ஆவார்.

தொடர்டர்புடைய செய்திகள்
புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று
இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு "United States of India" என மதிமுக பொதுசெயலர் வைகோ
இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்

About இலக்கியன்

மறுமொழி இடவும்