இன அழிப்பின் நீதிக்கான போராட்டம்

எந்த ஒரு தேசத்திற்கும் இறுதியாக இரண்டு மூலவளங்கள் காணப்படுகின்றன. அந்த தேசத்தின் காணிகளும் அதன் மக்களுமே அந்த மூலவளங்கள் ஆகும். இந்த மூலவளங்களே ஒரு தேசத்தின் அங்கீகாரத்தின் அடிப்படை.

அந்த வகையில் இவ் மூலவளங்களை இல்லாதொழிக்கின்ற அல்லது தமிழ் இனப் பரம்பலை மாற்றியமைக்கின்ற செயற்பாடுகளைத்தான் மாறி மாறி வருகின்ற எல்லா சிறிலங்கா அரசுகளும் மேற்கொள்கின்றன.

தமிழ்மக்களை இல்லாதொழிக்க பல்வேறுபட்ட திட்டமிட்டட இன அழிப்புக்களை நிகழ்த்தி காட்டிய அரசுகள் இப்போது சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்வீகமான வளமிக்க காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றன.

அந்தவகையில் தான் இன்று மண்டதீவில்

உள்ள J/07 மண்டதீவு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் இடம்பெறவிருந்த தனியார் காணி அபகரிப்பும் இவ் நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட்ட ஒரு நிகழ்வாகும்.

மண்டதீவில் உள்ள சிறிலங்கா கடற்படையின் வெலுசுமன படைப்பிரிவின் பிரதான முகாம் விஸ்தரிப்புக்காக 29 பயனாளிகளின்; 18 ஏக்கர் 01 றூட் 10 பேர்ச் விஸ்தீரணமுள்ள வளமிக்க தனியார் காணியை அபரிக்கப்படும் செயற்பாடு
நடைபெறவிருந்த நிலையில் அது பொது மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இன்று கூட பல வருடங்களாக எமது பூர்வீக காணிகளை விடுவியுங்கள் என்று மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடிவருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க அவ் மக்களின் நியாயமான அக் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காதஇ
அக்காணிகளை விடுவிக்காத அரசு அதற்கும் மேலதிகமாகவும் தமிழர் தாயகத்து நிலங்களை கூறுபோடு அபகரிக்கின்ற செயற்பாடுகளையே மீண்டும் செயற்படுத்தி வருகின்றனர்.

தொல்லியல் மரவுரிமைஇ மாகவலி வலயம் என்ற பல்வேறுபட்ட போர்வையில் எம் தமிழ்த் தேசத்தின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் சட்டம், ஒழுங்கு, அதிகாரம் என்ற போர்வையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகளில் திட்டமிட்ட வலிந்த சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு இன விகிதாரசாரத்தை மாற்றியமைப்பதன் மூலம் எதிர்காலத்தில் ‘தமிழ் மக்கள் தனித்துவமாக வாழ்ந்த தமிழ்த் தேசம்” என்ற
கருப்பொருள் நீர்த்துப்போய்விடும். இத் தத்துவமே கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது வடக்கின்மீதும் இது பிரயோகிக்கப்படுகின்றது.

தமிழ்த்தேசத்திற்கான அங்கீகாரம் கிடைக்காத வரை இவ்வாறான நில அபகரிப்புக்களையும் திட்டமிட்ட வலிந்த இன விகிதாசார மாற்றங்களும் நிகழத்தான் போகின்றன அந்த வகையில் நாங்கள் எங்கள் வாழ்வின் எந்தக் கட்டத்தில்
இருந்தாலும் இது போன்ற நில அபகரிப் புக்களை தடுத்து நிறுத்தி எம் தமிழ் தேசத்து மண்ணையும் மக்களையும் நாம் தான் காப்பாற்றவும் வேண்டும் மேலும் உயர்த்தவும் வேண்டும்.

இவ்வாறான நில அபகரிப்புக்களைத் தடுத்து நிறுத்தி தமிழன் என்றோர் இனமுண்டு அவனுக்கென்றொரு தனித்துவமான தேசம் உண்டு என்பதனை சிங்கள தேசத்திற்கு உணர்த்துவதற்கு ஒன்றுபட்டு போராட வேண்டும்

வரதராஜன் பார்த்திபன்

யாழ்.மாநகர சபை உறுப்பினர்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

About இலக்கியன்

மறுமொழி இடவும்