தேடுதல் தொடர்கிறது?

இலங்கையின் வடக்கு தெற்கென அனைத்து பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றது.

யாழ்ப்பாணம் ஜிம்மா பள்ளிவாசல் மற்றும் அதை சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தீவிர தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு வர்த்தக நிலையங்கள் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளை தெற்கில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து வெலிமடை போகஹகும்புர பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் வெளிநாட்டில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் உள்ளடக்கிய சீ.டீ. ஒன்றும், சந்தேகத்திற்கிடமான மோட்டார் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 13 பேரைக் கைது செய்துமுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (04) அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்