ரிஷாட் பதியுதீன் வீடு பாதுகாப்பு தரப்பினரால் முற்றுகை!

மன்னார் – தாராபுரம் பகுதியில் பாதுகாப்பு படையினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீடும் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த வீட்டில் இருந்து எந்தவித சந்தேகத்திற்குரிய பொருட்களையும் கண்டுபிடிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அதன்படி தற்போதுவரை பல வெடிபொருட்கள், ஆயுதங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தில் பலரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்