அதிகாரத்தை கையிலெடுக்கும் இராணுவத்தினர்

நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று மீண்டும் வெடித்துள்ள கலவரங்களை அடுத்து- தற்போதைய நிலைமைகள் தொடர்பாக நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“படையினரும், காவல்துறையினரும் தமது பணிகளை நிறைவேற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

வடமேல் மாகாணத்தில் சில குழுக்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் சொத்துக்களை அழித்துள்ளனர். நிலைமைகளை படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்தக் குழுக்கள் மேலும் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இதனால் தான் நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

தற்போதைய குழப்ப நிலைமைகள் தொடர்ந்தால், அது வெசாக் பண்டிகையை மக்கள் கொண்டாடுவதிலும் தடைகளை ஏற்படுத்தும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்