யாழில் கண்டுபிடிக்கப்பட்ட பதுங்குகுழி தீவிரவாதிகளினுடையது

யாழ்.நகா் பகுதியை அண்டிய முஸ்லிம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் பதுங்குழிகள் தொடா்பாக காவல்துறையினர் பரபரப்பான தகவல்களை வழங்கியுள்ளதாக தென்னிலங்கையை தளமாக கொண்டு இயங்கும் இணைய தளங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இந்த செய்திகளின் பிரகாரம்,

நாவாந்துறை பகுதியை அண்டியுள்ள ஒஸ்மானியா கல்லூரி வீதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வீட்டின் அடித்தளத்தில் நிலக்கீழ் தளம் இருப்பது சிறப்பு அதிரடிப் படையினரால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பதுங்கு குழி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவொன்றின் கோரிக்கைக்கு அமைய நிர்மாணிக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சோதனையின் போது இந்த சுரங்க அறை கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும் போர் காலத்தில் பாதுகாப்பிற்காக நிர்மாணித்த ஒன்று என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது. வீட்டின் உரிமையாளர் தப்பிடியோடிய நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினால் பெருந்தொகை பணம் கொடுக்கப்பட்ட, சுரங்க அறையை நிர்மாணிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

நிலக்கீழ் அறை மற்றும் சிறைச்சாலை அறை ஒன்றை அமைக்குமாறு அவர்கள் கோரியிருந்தனர். எனினும் தங்களுக்கு பிடித்த முறையில் நிர்மாணித்துள்ளதாக சந்தேக நபரான வீட்டின் உரிமையாளர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளரான முஸ்லிம் வர்த்தகர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர். குறித்த நபரிடம் அடிப்படைவாத குழுவுடனான தொடர்புகள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்