பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்

தமிழ்த் தேசிய இனத்தின் ஆணிவேராகிய எமது தேசியத்தலைவரையும் அவரின் தலைமையிலான எமது விடுதலைப்போராட்டத்தையும் அதன் இறுதி இலக்காகிய சுதந்திர தமிழீழத்தையும் இழிவுபடுத்தி, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (British Broadcasting Cooperation – BBC) தமிழ்ப்பிரிவானது, 18 – 05 – 2019 அன்று, அதாவது எமது இனவழிப்பின் 10 வருட, கொடுந்துயரம் நிகழ்த்தப்பட்ட அதே நாளில், திட்டமிட்டபடி வலிந்து, உண்மைக்குப் புறம்பான மற்றும் வரலாற்றை திரிபுபடுத்தக்கூடிய இரண்டு காணொளிகளை, தமது முகப்புத்தகத்தில் (BBC News தமிழ்) வெளியிட்டிருந்தார்கள்.

இதனை கண்டித்து லண்டன் வாழ் தமிழர்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

எமது இனத்தின் மேதகு தேசியத் தலைவரையும், தேசவிடுதலை வீரர்களையும் அவர்களின் தர்மத்தின் வழியிலான ஆயுத போராட்டத்தையும் எவராயினும் இனிக் கொச்சைப்படுத்த தமிழர்கள் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட
மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ
யேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக

About இலக்கியன்

மறுமொழி இடவும்