பயணத் தடையை நீக்குமாறு மேற்கு நாடுகளிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் மோசமடைந்திருந்த பாதுகாப்பு நிலைமைகளில், 99 வீதம் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனவே, அவசரகாலச்சட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் நீக்கப்படும் என்றும், அவர் கூறியுள்ளார்.

மேற்குலக நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார்.

அவுஸ்ரேலியா, கனடா, ஜப்பான், பிரித்தானியா, ஜேர்மனி,ஈ அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

உடனடி பாதுகாப்பு நிலைமைகளைக் கையாளுவதற்கே அவசரகாலச்சட்டத்தை பிறப்பிக்க வேண்டியிருந்தது என்று குறிப்பிட்ட சிறிலங்கா அதிபர், எனினும், இதனை மேலும் நீக்க வேண்டிய தேவை இல்லை என்றும் கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு விட்டனர் என்றும், சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், சிறிலங்காவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகளை நீக்குமாறும், மேற்குலக நாடுகளின் தூதுவர்களிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்