மகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்த ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்காது என்று, அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டு விட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இப்போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் அல்ல.

கட்சியின் யாப்புக்கு அமைய, இன்னொரு கட்சியில் இணைந்து கொண்டவர், சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருக்க முடியாது. அவரது உறுப்புரிமை தானாகவே இழக்கப்பட்டு விடும்.

ஆனாலும், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான பேச்சுகளுக்கு அது இடையூறாக இருக்கும்.

பொதுஜன பெரமுனவுடனான பேச்சுக்களை குழப்புவதற்கு நாங்கள் விரும்பவில்லை, ஏனென்றால், கிட்டத்தட்ட இறுதி சுற்றுகளுக்கு வந்து விட்டோம்.

அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் நாங்கள் பேச்சுக்ககளை முடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
ஐனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தபாய ராஐபக்சவின் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் என்பன போர் வெற்றிகளில் அல்லது போர்க்காலச் சிந்தனைகளிலேயே தற்போதும் இருக்கின்றார்
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இன்று (20) பதவி விலகியுள்ளார். இந்நிலையில் நாளை (21) முன்னாள் ஜனாதிபதியும், ஒக்டோபர்
நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளது என்று அந்த அமைப்பின் பொதுச் செயலாளர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்