டெலோவிலிருந்து முற்றாக விலகினார் சிவாஜி!

டெலோ அமைப்பிலிருந்த தனது 40 வருட அங்கத்துவத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று ராஜினாமா செய்ததன் மூலம் இழந்துள்ளார்.

ஏதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தனித்து எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிட முற்பட்டதனையடுத்து இது தொடர்பில் விளக்கமளிக்க டெலோ தலைமை இன்று 3ம் திகதி வரை காலக்கெடு வழங்கியிருந்தது.

இந்நிலையில் இன்று காலை யாழ்ப்பாணத்தில் டெலோ அமைப்பின் தலைவர் சிறீகாந்தா அலுவலகத்தில் தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளை துறப்பது தொடர்பான கடிதத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் கையளித்துள்ளார்.

இதன் மூலம் தான் கட்சி பின்னணி ஏதுமற்ற வேட்பாளராகியிருப்பதாக தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம் தனக்கு ஒட்டு மொத்த தமிழ் மக்களும் வாக்களிக்க அழைப்பும் விடுத்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு 100 நாட்கள் அவகாசம் வழங்கியிருக்கும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம், 100 நாட்கள் நி றைவுக்குள்
தமிழ் மக்களை, தமிழ் மக்களின் நிலையில் நின்று தமிழர் தேசத்தின் நோக்கு நிலையில் நின்று வழிநடாத்தவல்ல நேரிய தலைவனில்லாத சூழமைவில்

About இலக்கியன்

மறுமொழி இடவும்